Posts Tagged ‘mom’s love’

நேற்று (11-05-2013) மாலை  பெங்களூரில் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன் , அப்போது பார்த்த ஒருவிஷயத்தை பதிவு செய்கிறேன்.

ஒரு இருவத்து ஐந்து வயது மதிக்க தக்க ஒரு தம்பதி என்னுடைய முன் சீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தனர் .அவர்கள் கையில் ஒரு ஒரு வயதுள்ள குழந்தை இருந்தது . அந்த குழந்தை பசியால் அழுதுகொண்டு இருந்தது . அந்ததாய் , ஒரு பீடிங் பாட்டிலை எடுத்தார். அதில் சிறிதளவு பால் இருந்தது (அதை பார்க்க ஏதோ காலையில் ஊத்தி  வைத்தது போல் இருந்தது ), ஆனால் அந்த குழந்தை அதை குடிக்கவில்லை. உடனே அந்த அம்மா செய்த விஷயம் என்னை திடுக்கிட வைத்தது .தன் கை பையில் இருந்து ஒரு ரெடிமேட் சாக்லேட் ஷேக் (இப்பொழுது எல்லாம் ஒரு டின் இல் விற்பனை செய்யபடுகிறது ) எடுத்தார் . அந்த சாக்லேட் ஷேக்கை பீடிங் பாட்டிலில் ஊத்தி கொடுத்தார் . அந்த குழந்தையும் வேறு வலி இல்லாமல் குடிக்கிறது .

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அந்த அம்மா அந்த குழந்தைக்கு பீடிங் பாட்டில்  வைத்து பால் குடுக்கவில்லை , அந்த தந்தை அதை செய்கிறார்.

இந்த நேரத்தில் கூட அந்த தாய் தந்தையின் அன்யோன்யம் ஐயையோ , முடியல சாமி .அந்த குழந்தைக்கு தந்தை உணவு கொடுக்கிறார் , அந்த தாயோ தன் கணவருக்கு குர்குரே ஊட்டுகிறார்.இவை அனைத்தும் பேருந்தில் நிகழ்கிறது என்பதை அவர்கள்  மறந்தே விட்டனர் போலும்.

இதை நினைத்து சிரிப்பதா ,கோபபடுவதா , என்ன செய்வது என்றே புரியவில்லை . ஆனால் நான் ஒரு பாடம் பயின்றேன் .

– நன்றி வேணு , தமிழில் ப்லாக்  எழுத ஐடியா கொடுத்ததற்கு 🙂 🙂 🙂